நீஷம்மின் விக்கெட்டை பறித்த தோனியின் சாதூர்யம்!

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 04:36 pm
ms-dhoni-pulls-off-a-ridiculous-run-out-to-leave-james-neesham-stunned

வெலிங்டன் மைதானத்தில் இன்று நடந்த 5வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணியின் நீஷம் 44 ரன்கள் எடுத்திருந்த போது கீப்பிங் செய்துக்கொண்டு இருந்த தோனி சதூர்யமாக அவரை ரன் அவுட் செய்தார். 

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடியது. முன்னரே தொடரை கைப்பற்றி உள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தற்போது ஓய்வில் இருக்கிறார்.

இதனால் ரோகித் சர்மா அணியை தலைமை தாங்குகிறார். இன்று டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 252 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 217 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. நியூசிலாந்து 6 விக்கெட் இழந்து விளையாடிக் கொண்டு இருந்த போது, 37வது ஓவரை இந்தியாவின் கேதர் ஜாதவ் வீசினார். 

 

 

பந்தை நீஷம் எதிர்கொண்டார். அப்போது தோனி எல்பிடபள்யூ அப்பீல் செய்தார். அதற்கு நடுவர் என்ன கூறுவார் என்று கவனித்து கொண்டு இருந்த நீஷம் க்ரீசுக்கு வெளியே நின்றுருந்தார். இதனை கவனித்த தோனி அருகில் இருந்த பந்தை எடுத்து ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்தார். தோனியின் சதூர்யமான ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close