அணியின் ஒற்றுமையே வெற்றிக்கு காரணம்: ரோஹித் ஷர்மா

  Newstm Desk   | Last Modified : 03 Feb, 2019 10:27 pm
we-came-together-as-a-team-rohit-sharma

இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோஹித் ஷர்மா, நியூஸிலாந்துக்கு எதிரான 5வது போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அணியின் ஒற்றுமையே இந்த வெற்றிக்கு காரணம் என கூறியுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா ஒருநாள் தொடரை இந்திய அணி போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றிய நிலையில், நான்காவது போட்டியில் படுதோல்வி அடைந்தது. நட்சத்திர வீரர் கோலி இல்லாவிட்டாலும், இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி வெற்றி கண்டது. துவக்க வீரர்கள் சொதப்பினாலும், நடுநிலை வீரர்களான ராயுடு 90 ரன்களும், விஜய் சங்கர் மற்றும் ஹர்டிக் பாண்ட்யா 45 ரன்களும் அடித்து அணிக்கு ஒரு நல்ல இலக்கை கொடுக்க உதவினர்.

பவுலிங்கிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் மிக சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 217 ரன்களுக்கு நியூஸிலாந்து ஆல் அவுட்டானது. இந்த போட்டியின் வெற்றி குறித்து பேசிய தற்காலிக இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, "டாஸ் வென்ற போது நான் வீரர்களிடம், எல்லோரும் சேர்ந்து சிறப்பாக விளையாடினால் மட்டுமே வெல்ல முடியும் என்று கூறினேன். அதுதான் நடந்தது. 4 விக்கெட்டுகள் போன பிறகு, எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. ராயுடுவும், விஜய் ஷங்கரும் அதை கொடுத்தனர். பின்னர், ஹர்டிக் மற்றும் கேதர் அருமையாக விளையாடினர். பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடி சரியான நேரத்தில் பவுலர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதுபோன்ற போட்டிகளில் வெல்ல வேண்டுமென்றால் அணியில் ஒரு சமநிலை இருக்க வேண்டும். இங்கு வந்து நியூஸிலாந்தை நிறுத்துவது சாதாரண காரியமல்ல" என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close