ஐசிசி தரவரிசையில் தோனி முன்னேற்றம்; இந்திய வீரர்கள் ஆதிக்கம்!

  Newstm Desk   | Last Modified : 04 Feb, 2019 04:07 pm
indians-rule-icc-odi-rankings

ஐசிசி வெளியிட்ட ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில், அதிரடி இந்திய வீரர் தோனி மூன்று இடங்கள் முன்னேறி 17வது இடத்தை பிடித்துள்ளார். பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் இந்தியர்களே முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து முன்னாள் இந்திய கேப்டன் தோனி சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில், மூன்று இடங்கள் முன்னேறி 17வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 3 அரைசதங்கள் அடித்திருந்தார் தோனி. 

ஆல்ரவுண்டர் கேதர் ஜாதவ் 8 இடங்கள் முன்னேறி 35வது இடத்தைப் பிடித்துள்ளார். முதலிடத்தில் கேப்டன் விராட் கோலியும், 2வது இடத்தில் துணை கேப்டன் ரோஹித் ஷர்மாவும் தொடர்ந்து வருகின்றனர். பவுலிங்கிலும், இந்திய பந்துவீச்சாளர் பும்ரா முதலிடத்தில் உள்ளார். 4வது இடத்தில் குல்தீப் யாதவும், 5வது இடத்தில் சஹாலும் உள்ளனர்.

சிறந்த ஒருநாள் அணியாக இங்கிலாந்து முதலிடத்தில் தொடர, இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தென்னாபிரிக்கா மூன்றாவது இடத்திலும், நியூஸிலாந்து 4வது இடத்திலும் உள்ளன.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close