அய்யோ இவனா..: சாஹலிடமிருந்து தப்பித்து ஓடிய தோனி!

  Newstm Desk   | Last Modified : 05 Feb, 2019 11:20 am
yuzvendra-chahal-chases-ms-dhoni-to-make-an-appearance-on-chahal-tv

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பின் தன்னிடம் பேட்டி எடுக்க வந்த சாஹலை பார்த்து தோனி ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்துள்ளது. இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது. 

ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் இந்திய பந்துவீச்சாளர் சாஹல் வீரர்களை பேட்டி எடுப்பார். இந்த வீடியோக்களை சாஹல் டிவி என்று பிசிசிஐ வெளியிடும். இந்நிலையில் கடைசி ஆட்டத்தின் முடிவில் ஓரமாக நின்றுக் கொண்டு இருந்த தோனியிடம் பேட்டி எடுக்க சாஹல் சென்றார். ஆனால் அவரை பார்த்ததும் தோனி டிரெசிங் ரூமிற்குள் ஓடிவிட்டார். 

 

 

இந்த வீடியோ தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. முன்னதாக சாஹல் டிவிக்கு ரோகித் சர்மா, கோலி ஆகியோர் பேட்டி கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close