டாஸ் வென்றது இந்தியா; பந்துவீச்சு செய்ய தேர்வு!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 02:12 pm
india-have-won-the-toss-and-have-opted-to-field

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.  

முன்னதாக, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டி இன்று நியூசிலாந்து வெலிங்டன் வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் தொடங்கியுள்ளது.

விராட் கோலி ஓய்வில் இருப்பதால் பெறுவதால், இன்று நடைபெறும் போட்டிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்குகிறார். 

முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close