நியூசிலாந்து அதிரடி ஆட்டம்; இந்தியாவுக்கு 220 ரன்கள் இலக்கு!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 02:21 pm

india-needs-220-runs-to-win

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 220 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டி இன்று நியூசிலாந்து வெலிங்டன் வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் தொடங்கியது. விராட் கோலி ஓய்வில் இருப்பதால் பெறுவதால், இன்று நடைபெறும் போட்டிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்குகிறார். 

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.  அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற 220 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணியின் டிம் செய்பர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். கோலின் முன்ரோ, வில்லியம்சனும் சிறப்பாக விளையாடினர். 

இந்திய அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா 2 விக்கெட், சாஹல், குருனால் பாண்டியாம் புவனேஸ்வர் குமார், கஹீல் அகமது தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 

முன்னதாக, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close