முதல் டி20 போட்டி: 80 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 06 Feb, 2019 04:03 pm
new-zealand-won-by-80-runs

இந்திய -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.  முன்னதாக, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி சாதனை படைத்தது.

இதைத்தொடர்ந்து இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில், முதல் போட்டி இன்று நியூசிலாந்து வெலிங்டன் வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் தொடங்கியது. விராட் கோலி ஓய்வில் இருப்பதால் பெறுவதால், இன்று நடைபெறும் போட்டிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்கினார்.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதிரடியாக விளையாடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் டிம் செய்பர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். கோலின் முன்ரோ, வில்லியம்சனும் சிறப்பாக விளையாடினர். 

இந்திய அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா 2 விக்கெட், சாஹல், குருனால் பாண்டியாம் புவனேஸ்வர் குமார், கஹீல் அகமது தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி வெற்றி பெற 220 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். ரோஹித் 1 ரன்னில் ஆட்டமிழக்க, தவான் நின்று ஆடி 29 ரன்கள் எடுத்தார். அடுத்தடுத்து வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக தோனி  31 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். 

இறுதியில், 20 ஓவர் முடியும் முன்னே மளமளவென விக்கெட்டுகள் விழுந்தன. 19.2 ஓவரில் 139 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 

நியூசிலாந்து அணியில் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசிய டிம் செய்பர்ட் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close