ரஞ்சி கோப்பை : மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது விதர்பா அணி

  Newstm Desk   | Last Modified : 07 Feb, 2019 04:56 pm
vidarbha-defeat-saurashtra-by-78-runs-to-lift-back-to-back-ranji-trophy-titles

இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரா ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பெற்றது விதர்பா அணி.

இந்த தொடரின் இறுதிப்போட்டி நாக்பூரில் நடந்தது. முதல் இன்னிங்சில் விதர்பா அணி 312 ரன்களும், சவுராஷ்டிரா அணி 307 ரன்களும் எடுத்தன. 5 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி 200 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  206 ரன்கள் எடுத்தால் சாம்பியன் என்ற இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது.

இன்றைய 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் விஸ்வராஜ் ஜடேஜாவை (52) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இறுதியில், சவுராஷ்டிரா அணி 127 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனால், விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டது.  இரு இன்னிங்சிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்திய விதர்பா வீரர் ஆதித்யா சர்வாதே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close