ரோஹித் அதிரடி; நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 02:51 pm
india-beat-new-zealand-level-series

நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில், ரோஹித் ஷர்மாவின் அதிரடியால், இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.

முதல் போட்டியை அசத்தலாக வென்ற நியூஸிலாந்து, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது நியூஸிலாந்து. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் தவான் அட்டகாசமாக விளையாடி, 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். ரோஹித் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து வந்த ரிஷப் பன்ட் 40 ரன்கள் விளாச, தோனி 20 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தனர். 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, தொடரை சமன் செய்துள்ளது. 3வது மற்றும் கடைசி போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close