ஆஸி அணியின் உதவி பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 03:26 pm
ricky-ponting-joins-australia-s-coaching-staff

ஐசிசி நடத்தும் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்வு நியமிக்கப்பட்டுள்ளார். 

2003 மற்றும் 2007 ஆகிய உலகக்கோப்பையை பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா வென்றது. வரவிருக்கும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு பாண்டிங் உதவிப்பயிற்சியாளராகப் பொறுப்பேற்கிறார்.

இது குறித்து அவர் பேசும் போது,  “உலகக்கோப்பைக்காக மீண்டும் அணியுடன் இணைவது உற்சாகமூட்டுகிறது, முன்பு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுடன் குறுகிய காலத்திற்காக பயிற்சியாளராக இருந்திருக்கிறேன். ஆனால் உலகக்கோப்பை என்பது எனக்கு வேறு பொருள் தருகிறது, தேர்வாளர்களுக்கு தற்போது தேர்வு செய்ய கிடைத்திருக்கும் வீரர்கள் மீது எனக்கு அசையாத நம்பிக்கை உள்ளது இந்த உலகக்கோப்பையில் எங்களை வீழ்த்துவது கடினம்" என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close