தவறுகளை திருத்திக் கொண்டோம்: ரோஹித் ஷர்மா

  Newstm Desk   | Last Modified : 08 Feb, 2019 08:55 pm
we-learn-from-our-mistakes-captain-rohit-sharma

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றதற்கு கடந்த போட்டியில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டதே காரணம் என இந்தியா கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி 2-வது போட்டியில் அசத்தலாக வெற்றி பெற்று, தொடரை சமன் செய்துள்ளது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா அரைசதம் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு ஊன்றுகோலாக இருந்தார். போட்டியை தொடர்ந்து பேசிய ரோஹித் ஷர்மா, பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடியதாக தெரிவித்தார். 

"அணியில் தரமான வீரர்கள் உள்ளனர். ஆனால் இன்று நாங்கள் திட்டமிட்டதை சரியாக செயல்படுத்தினோம். கடந்த போட்டியில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டோம்" என்று கூறினார்.

நியூஸிலாந்து அணி மிகவும் சிறப்பான அணி என்றும், இறுதி போட்டியில் இந்திய வீரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் ரோஹித் எச்சரித்தார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close