கேப்டனாக தோனி, கோலி சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா

  Newstm News Desk   | Last Modified : 09 Feb, 2019 12:16 pm

rohit-sharma-beats-virat-kohli-ms-dhoni-to-bag-elite-captaincy-record-goes-joint-top-in-overall-list

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விராட் கோலி, தோனி ஆகியோரின் சாதனையை தற்காலிக கேப்டன் ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார். 

இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் தற்போது டி20 போட்டி நடந்து வருகிறது. இதில் இந்திய அணி முதல் போட்டியில் தோல்விடைந்தது. இதனையடுத்து நேற்று நடந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோஹித் ஷர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இதுவரை 14 போட்டிகளில் கேப்டனாக ரோஹித் இருந்துள்ளார். இதில் 12 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

முன்பு கேப்டனாக 14 போட்டிகளை கடந்த பிறகு தோனி மற்றும் கோலி தலைமையிலான இந்திய அணி 8 வெற்றிகளை மட்டுமே பெற்றிருந்தது. இந்நிலையில் அவர்கள் சாதனையை  ரோஹித் ஷர்மா முறியடித்துள்ளார். 

சர்வதேச அளவில் இந்த சாதனையை க்ளார்க்குடன் சமன் செய்துள்ளார் ரோஹித் ஷர்மா. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close