நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: சேவாக்

  Newstm Desk   | Last Modified : 09 Feb, 2019 03:13 pm
virender-sehwag-denies-interest-in-joining-politics

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக் போட்டியிட உள்ளதாக வந்த செய்திக்கு அவர் முற்றிலுமாக மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்தாண்டு நடக்கவிருக்கும நாடாளுமன்ற தேர்தலில் பல பிரபலங்களை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது. இதே போல இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாஜக சார்பில் அரியானா மாநிலம் ரோத்தக் தொகுதியில் போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகின.

 

— Virender Sehwag (@virendersehwag) February 8, 2019

 

இதனை சேவாக் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில் ‘‘2014ம் ஆண்டு வந்த வதந்திதான். தற்போதும் உலா வருகிறது. இதில் புதுமை எதுவுமில்லை. துளியும் உண்மையில்லை.  அப்போதும் தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போதும் சரி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை’’ எனக் கூறியுள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close