இன்னும் இரண்டே சிக்சர்... கெய்ல் சாதனையை முறியடிக்கவிருக்கும் ரோஹித்!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 10:41 am
rohit-sharma-stands-two-maximums-away-from-surpassing-chris-gayle-to-script-t20i-world-record

ஹாமில்டனில் இன்று டி20 தொடரை வெல்ல போகும் அணி எது என்று தீர்மானிக்க கூடிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் 2 சிக்சர்கள் அடித்தால் ரோஹித் ஷர்மா புதிய சாதனைப்படைப்பார். 

முன்னதாக நடந்த 2வது டி20 போட்டியில் இந்திய அணியில் தற்காலிக கேப்டன் ரோஹித் ஷர்மா அரைசதம் அடித்தார். மேலும் டி20 போட்டியில் 100 சதம் அடித்த முதல் இந்திய  வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 

இந்நிலையில் இன்றைய போட்டியில் வெறும் இரண்டே சிக்சர்களின் மூலம் அவர் புதிய சாதனை படைக்க இருக்கிறார். சர்வதேச அளவில் டி20 போட்டியில் கிரிஸ் கெய்ல் மற்றும் மார்டின் குப்தில் ஆகியோர் 103 சிக்சர்கள் அடித்துள்ளனர். 

ரோஹித் ஷர்மா 102 சிகசர்களுடன் இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறார். எனவே இந்த சாதனையையும் அவர் முறிடிப்பாரா என்ற ஆவல்  ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close