3வது டி20 போட்டி: இந்திய அணி பந்து வீச்சு

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 12:16 pm
india-have-won-the-toss-and-have-opted-to-field

ஹாமில்டனில் இன்று நடக்கும் 3வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் இந்திய அணியில் சாஹல் வெளியேற்றப்பட்டு குல்தீப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

ஆஸ்திரேலிய தொடரை வென்ற கையோடு இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டியை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் டி20 தொடர் நடந்து வருகிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றது. இதனையடுத்து ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. 

இந்நிலையில் இன்று நடக்கும் கடைசி போட்டியில் யார் தொடரை வெல்வார்கள் என்று தெரிந்துவிடும் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close