கோலி போன்ற கேப்டன் கிடைத்திருப்பது இந்தியாவின் அதிர்ஷ்டம்: எம்எஸ்கே பிரசாத்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 01:18 pm
india-is-blessed-to-have-a-captain-like-vk-msk-prasad

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியை போல கேப்டன் அமைந்தது இந்தியாவின் அதிர்ஷ்டம் என தலைமை தேர்வு குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகிய பிறகு, கோலி அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  இதனையடுத்து அவர் தலைமையிலான அணி தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று வருகிறது. 

இந்தாண்டு நடக்கவிருக்கும் ஐசிசியின் உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் கோலியின் தலையில் இன்னொரு கிரீடம் வைத்ததை போல ஆகும். 

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் கோலி குறித்து சமீபத்தில் புகழ்ந்து பேசியுள்ளார். 

அவர், "கோலி போன்ற கேப்டன் கிடைத்திருப்பது இந்தியாவின் அதிர்ஷ்டம். அவருக்கும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. இது அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்" என்றார். 

மேலும் கே.எல்.ராகுலின் தற்போதைய  மோசமான ஃபார்ம் குறித்து பேசிய அவர், "ராகுலின் சமீபத்திய ஆட்டங்கள் எங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் வகையில் இருந்து வருகின்றன. இருந்தபோதிலும் அவர் சிறந்த வீரர். விரைவில் மீண்டும் பழைய ஃபார்முக்கு அவர் திரும்புவார் என்று நம்புகிறோம். அவரை தற்போது இந்தியா ஏ அணிக்காக தேர்வு செய்துள்ளோம்" என்றும் தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close