வார்னர், ஸ்மித் இணைந்தால் ஆஸி அணி உலக கோப்பை வெல்லும்: ரிக்கி பாண்டிங்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 03:34 pm
australia-can-win-title-with-steve-smith-and-david-warner-in-the-mix-says-ricky-ponting

ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை வெல்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று 2 முறை உலக கோப்பையை வென்ற அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

கடந்தாண்டு மார்ச் மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியினர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் அந்த அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் சர்வதேச போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. 

அதற்கு பிறகு அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. சமீபத்தில் நடந்த இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்துள்ளது. 

இதையடுத்து  ஆஸி அணியின் உதவி பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டால் ஆஸ்திரேலிய அணி மற்ற அணிகளை விட சிறப்பான அணியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் பேசும் போது, "தற்போதைய நிலையில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் தான் உலக கோப்பையை வெல்ல அதிகம் வாய்ப்புள்ள அணிகளாகத் திகழ்ந்து வருகின்றன. இருந்தபோதிலும் ஆஸ்திரேலிய அணியுடன் அவர்கள் இருவரும் மீண்டும் இணைக்கப்பட்டால் எங்களுக்கும் வாய்ப்பு இருக்கிறது" என்று அவர் கருத்து கூறியுள்ளார். 

தடையில் இருக்கும்  டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் தற்போது காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் மார்ச் மாதத்தோடு அவர்கள் மீது விதிக்கப்பட்ட தடைக்காலம் முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close