300வது டி20 போட்டியில் விளையாடிய தல தோனி

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 04:14 pm
ms-dhoni-is-playing-his-300th-t20-game-in-hamilton

இந்திய அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்த தோனி இன்று ஹாமில்டனில் தனது 300வது டி20 போட்டியில் விளையாடினார். 

இந்திய அணியில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்த போது பெரும் மாற்றத்தை உண்டாக்கியவர் தோனி. அவர் தலைமையிலான இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக ஐசிசியின் அனைத்து வகை கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் இன்றும் தோனியிடம் தான் இருக்கிறது. 

எனினும் கேப்டன் பதவியிலிருந்து விலகி தற்போது விளையாடி வரும் அவரை டி20 தொடரில் இருந்து விலகி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றனர். 

இந்நிலையில் தோனி இன்று தனது 300வது டி20 போட்டியில் விளையாடினார். நியூசிலாந்துக்கு எதிராக இன்று ஹாமில்டனில் 3வது டி20 போட்டி நடந்தது. இதில் தோனி  இந்த சாதனையை புரிந்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 2 ரன்களில் விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close