டெஸ்ட் கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக அழியும்: முத்தையா முரளிதரன்

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 04:31 pm
muralitharan-bowls-a-straight-one-little-by-little-test-cricket-will-lose

காலப்போக்கில் டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறையத் தொடங்கும் என்றும், சிறிது சிறிதாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வரும் காலத்தில் நாம் இழந்து நிற்போம் என்றும் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 

இலங்கை தேசத்தின் கிரிக்கெட் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த சுழல் புயல் முத்தையா முரளிதரன் சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், "இப்போதுள்ள கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் போட்டியை வர்த்தக ரீதியாகவே அணுகுகிறார்கள். சமூகம் மாறிக்கொண்டுவருவதால், கிரிக்கெட்டும், கிரிக்கெட் வீரர்களும் மாறி வருகிறார்கள்.

இப்போதுள்ள பேட்ஸ்மேன்களுக்கு ஆடுகளத்தில் எதிரணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு நிலைத்து ஆடும் திறமை, தடுத்தாடும்  பொறுமை இல்லை. இப்படியே சென்றால், சிறிது சிறிதாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை வரும் காலத்தில் நாம் இழந்து நிற்போம்.டெஸ்ட் கிரிக்கெட் தான் சிறந்த கிரிக்கெட் போட்டி" என்று தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close