டி20 தொடரை வென்றது நியூசி அணி: இந்தியா தோல்வி

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 04:00 pm
3rd-t20-black-caps-won

ஹாமில்டனில் இன்று நடந்து மூன்றவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்று தொடரை  2-1 என்ற கணக்கில் வென்றது. 

ஆஸ்திரேலிய தொடரை வென்ற கையோடு இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டியை இந்தியா 4-1 என்ற கணக்கில் வென்ற நிலையில் டி20 தொடர் நடந்து வருகிறது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப் பெற்றது. இதனையடுத்து ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த 2வது போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. 

இந்நிலையில் இன்று 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இதில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.

பின்னர் 20 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணி வீரர்கள் கடினமாக விளையாடியும் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. 

இதனையடுத்து இறுதியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இந்த டி20  தொடரை  2-1 என்ற கணக்கில் வென்றது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close