தேசியக் கொடியை தவறவிட்ட ரசிகர்; கேட்ச் பிடித்த தோனி!

  Newstm Desk   | Last Modified : 10 Feb, 2019 08:43 pm
dhoni-saved-the-national-flag-which-was-dropped-by-his-fan

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரரும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனியின் காலில் விழ ரசிகர் ஒருவர் முயன்றபோது, அவர் தவறவிட்ட தேசியக் கொடியை கீழே  விழாதபடி தக்க நேரத்தில் அதனை தோனி கேட்ச் பிடித்த நிகழ்வு பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியில்  நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இப்போட்டியின் முதல் பாதி ஆட்டம் முடிந்து இரு அணி வீரர்களும் மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது, இந்திய அணியின் பிரபல வீரரான தோனியின் காலில், அவரது ரசிகர் ஒருவர் விழ முயன்றார்.

தோனியின் காலில் விழும் ஆர்வத்தில் அவர் தன் கையில் இருந்த நம் நாட்டின் தேசியக் கொடியை தவறவிட்டார். இதனை உடனே கவனித்த தோனி, அதனை தரையில் விழாதபடி நொடி பொழுதில் கேட்ச் பிடித்தார்.

தோனியின் தேசப்பற்றை வெளிப்படுத்திய இந்த நிகழ்வு பார்வையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close