டி20 தரவரிசை: புதிய உச்சத்தில் குல்தீப் யாதவ், ரோஹித்!

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 11:40 am

kuldeep-yadav-attains-career-best-2nd-spot

ஐசிசி டி20 தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முதன் முறையாக 2வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். மேலும் ரோஹித் ஷர்மா 3 இடங்கள் முன்னேறி 7வது இடத்தில் உள்ளார். 

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான கடைசி போட்டி நேற்று (பிப்.10) நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்ததால், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

இந்நிலையில், டி-20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டி-20 தொடரை இந்திய அணி இழந்ததால், அணிகளுக்கான தரவரிசையில் 2 புள்ளிகளை இழந்தது. இருப்பினும், 124 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இந்தியா நீடிக்கிறது.

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை இழந்ததால், முதல் இடத்தில் உள்ள பாகிஸ்தான் அணியும் 3 புள்ளிகளை இழந்து 135 புள்ளிகளுடன் இருக்கிறது. பாகிஸ்தானை பந்தாடிய தென்னாப்ரிக்க அணி, 4 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று 118 புள்ளிகளுடன் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், டாப் 10 இடங்களுக்கு ரோஹித் ஷர்மா மட்டுமே இருக்கிறார். இவர் 3 இடங்கள் முன்னேறி 698 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்கள் தரவரிசையில், ‘சைனாமேன்’ குல்தீப் யாதவ் (728) முதல் முறையாக 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுவே இவரின் சிறந்த தரவரிசையாகும். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் (793) முதல் இடத்தில் உள்ளார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close