உலகக் கோப்பைக்கு பிறகு தோனி ஓய்வா? உண்மை என்ன...?

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 01:36 pm
chief-selector-talks-about-dhoni-s-world-cup-participation

மகேந்திர சிங் தோனியின் ஓய்வு குறித்து தேர்வு குழு ஆலோசனை செய்யவில்லை என்றும் தற்போது  உலகக்கோப்பை நோக்கியே தங்களது எண்ணம் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தற்போதைய ஃபார்ம் நிலையானதாக இல்லை என்றாலும் அவர் ஒவ்வொரு போட்டியிலும் விளையாட வேண்டும் என்ற எண்ணம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. இதனிடையே அவர் இந்தாண்டு நடக்க இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஓய்வு பெற இருப்பதாக செய்திகள் பரவின. 

இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் இதுகுறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் பேசியுள்ளார். 

அவர், "தோனியின் ஓய்வு குறித்து நிச்சயமாக இதுவரை நாங்கள் ஆலோசனை செய்யவில்லை. உலகக்கோப்பை தொடர் நெருங்கிவிட்டதால் இதுபோன்றவை குறித்து பேசி திசைதிருப்ப நினைக்கவில்லை. தற்போது, உலகக்கோப்பை நோக்கியே எங்களது எண்ணம் உள்ளது” என்று தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close