கிரிக்கெட் உலகம் கண்ட சிறந்த வீரராக கோலி இருப்பார்: சங்ககாரா

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 04:28 pm
virat-kohli-could-be-the-greatest-ever-sri-lankan-legend-kumar-sangakkara

வரும் நாட்களில் விராட் கோலி இதுவரை கிரிக்கெட் உலகம் கண்ட சிறந்த வீரர்களுள் ஒருவராக இருப்பார் என்றும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு சாதனையை பதிவு செய்ய வேண்டும் என்று தீர்மனித்து விளையாடுவது போல சாதனைகளை படைத்து வருகிறார். குறிப்பாக ஒவ்வொரு தொடரின் முடிவுலும் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் இவரே முந்தி இருக்கிறார். 

இந்நிலையில் கோலியின் ஆட்டம் குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்ககாரா புகழ்ந்துள்ளார். அவர் பேசும் போது, "விராட் கோலியின் ஆட்டம் எப்போதும் சிறப்பாக தான் அமைந்திருக்கிறது. தற்போதைய சூழலில் தலைசிறந்த வீரராக அவர் தான் இருக்கிறார். 

வரும் நாட்களில் அவர் இதுவரை கிரிக்கெட் உலகம் கண்ட சிறந்த வீரர்களுள் ஒருவராக இருப்பார். அல்லது அவர் தான் சிறந்த வீரர் என்ற நிலையில் இருப்பார் என்று தெரிவித்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.  

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Loading...
Advertisement:
[X] Close