உலகக்கோப்பைக்கு முன் கடைசி தொடரில் விளையாடுவது யார்?; கூடும் தேர்வுக்குழு

  Newstm Desk   | Last Modified : 12 Feb, 2019 05:49 pm
indian-selectors-to-convene-for-australia-series

உலக கோப்பைக்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதும் கடைசி சர்வதேச தொடருக்கான வீரர்களை தேர்வு செய்ய, வரும் 15ம் தேதி இந்திய கிரிக்கெட்டின் தலைமை தேர்வுக்குழு கூடுகிறது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது. அதைத்தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் 4-1 என வென்று வரலாறு காணாத சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்த நிலையில், உலகக் கோப்பைக்கு முன்னதாக, கடைசி சர்வதேச தொடரில், இரண்டு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.

இதைத்தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் இந்திய வீரர்கள் பிஸி ஆகிவிடுவார்கள். மே மாத இறுதியில் துவங்கும் உலக கோப்பைக்கு முன், சர்வதேச அளவில் இந்திய அணி விளையாடும் கடைசி தொடர் என்பதால், பல்வேறு காரணிகளை இந்திய தேர்வாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மூத்த வீரர்களுக்கு ஓய்வளிப்பது, இளம் வீரர்களுக்கு வாய்ப்புளிப்பது, முக்கிய பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வளிப்பது உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது. 

முக்கிய வீரர்கள், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போட்டிகளில் விளையாடி, ஓய்வில்லாமல் உலகக்கோப்பைக்கு சென்று விடக்கூடாது என்பதில் தேர்வாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள், என கூறப்படுகிறது. வரும் வெள்ளியன்று, இந்திய அணியின் தலைமை தேர்வுக்குழு டெல்லியில் கூடுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close