தோனி ஆஸ்திரேலிய தொடரில் பேக் டூ பேக் அரை சதங்கள் அடித்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி தொடர்ந்து பேக் டூ பேக் அரைசதங்கள் அடித்தார். நீண்ட நாட்களாக தோனியின் மோசமான ஃபார்மை பார்த்து நொந்து போயிருந்த அவரது ரசிகர்கள் அந்த ஹாட்ரிக் 50களை பார்த்து உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில் அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. தோனி தனது பேட்டில் சில மாற்றங்களை செய்திருக்கிறாராம்.
இதுகுறித்து சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவலின் படி, தோனியின் கிரிக்கெட் பேட்டின் அடிப்பகுதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பகுதி முன்பை விட அதிக வலைவாக அமைக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. தனக்கு உகந்த ஷாட்களை சரியாக அடிக்கவும், பந்துவீச்சாளர்கள் தனது பலவீனம் என நினைத்திருப்பதை மாற்றவும் தோனி இந்த மாற்றங்கள் செய்திருப்பதாக தெரிகிறது.
newstm.in