சுரேஷ் ரெய்னா தான் சிறந்த ஃபீல்டர்: புகழ்ந்த ஜான்டி ரோட்ஸ்

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 12:31 pm
jonty-rhodes-names-his-top-five-favourite-fielders-of-all-time

கிரிக்கெட் சிறந்த ஃபீல்டராக கருதப்படும் தென்னாப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் சமீபத்தில் ஐசிசிக்கு அளிக்கப்பட்ட பேட்டியில் சிறந்த ஃபீல்டருக்கான 5 பேர் கொண்ட பட்டியலில் சுரேஷ் ரெய்னாவுக்கு தான் முதல் இடம் என தெரிவித்துள்ளார். 

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தற்போது வர்ணனையாளராக இருக்கிறார். இவர் தன்னை பொறுத்தவரை அவர் சிறந்த ஃபீல்டராக கருதுபவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார். 

 

— Suresh Raina🇮🇳 (@ImRaina) February 13, 2019

 

அதில் சுரேஷ் ரெய்னாவுக்கு தான் முதல் இடம் என தெரிவித்துள்ளார். ரெய்னா குறித்து அவர் பேசும் போது, "இந்தியாவில் ஃபீல்டிங் செய்வது மிகவும் கடினமான ஒன்று. அவர் விளையாட தொடங்கியது முதலே ரெய்னாவின் ரசிகராகிவிட்டேன்" என தெரிவித்துள்ளார். 

இதற்கு சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close