தோனி பெவிலியன்: முன்னாள் கேப்டனுக்கு மரியாதை

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 03:17 pm
south-stand-of-jsca-cricket-stadium-in-ranchi-to-be-named-after-former-indian-captain

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை போற்றும் வகையில் ஜார்கண்ட் கிரிக்கெட் மைதானத்தின் தெற்கு பெவிலியனுக்கு தோனியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த தோனி, தற்போது அந்த மாநிலத்தின் அடையாளமாக திகழ்கிறார். இந்திய அணியின் கேப்டனாக அவர் இருந்த போது தொடர்ந்து கோப்பைகளை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் தரத்தை உயர்த்தினார். 

தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி தனது அனுபவத்தை வைத்து அணியின் கடினமாக நேரங்களில் களமிறங்கி அசத்தி வருகிறார். இந்நிலையில் தோனியின் சாதனைகளை போற்றும் வகையில் தற்போது ஜார்கண்ட் கிரிக்கெட் மைதானத்தின் தெற்கு பெவிலியனுக்கு தோனியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்படவில்லை. ஆனால் அந்த பெவிலியனின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு வந்து விளையாட உள்ளது. இந்த தொடரில் 3வது ஒருநாள் போட்டி இந்த மைதானத்தில் தான் நடக்க உள்ளது. எனவே அப்போது இதுகுறித்து அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close