சிக்சர் அடிப்பேன் என்று நினைத்தேன்: கடைசி டி20 சர்ச்சை குறித்து தினேஷ் கார்த்திக்

  Newstm Desk   | Last Modified : 14 Feb, 2019 04:03 pm
dinesh-karthik-explains-his-decision-to-not-take-a-single-off-the-final-over-in-3rd-t20i

நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியின் கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுக்காமல் நின்றது சர்ச்சையான நிலையில் அதற்கு தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதில் ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி 10 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணி சாதனை படைத்தது. பின்னர் டி20 தொடரில் முதல் போட்டியை நியூசிலாந்து அணியும் , இரண்டாவது போட்டியை இந்திய அணியும் வென்றது. 

தொடரை வெல்லப்போவது யார் என்று தீர்மானிக்குகம் கடைசி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. அந்த போட்டியின் கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற 16 ரன்கள் தேவைப்பட்டது.  அப்போது தினேஷ் கார்த்திக்கும், க்ருனல் பாண்டியாவும் களத்தில் இருந்தனர். அந்த ஓவரின் 3-வது பந்தில் சிங்கிள் எடுக்க தினேஷ் கார்த்திக் ஓடவில்லை. அடுத்து சிக்சர் அடிக்க அவர் முயற்சித்தார். ஆனால் அவரால் அடிக்க முடியவில்லை. 

இதனையடுத்து நீங்கள் தோனியா? கடைசியில் நின்று சிக்சர் அடித்து அணியை வெற்றிப்பெற வைக்க என பலர் விமர்சனம் செய்தனர். இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு தினேஷ் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசும் போது, “நானும், குருனால் பாண்டியாவும் அந்த நிலையில் சிறப்பாக விளையாடினோம். எதிரணி பந்துவீச்சாளர்களும் அழுத்தத்தில் இருந்ததால் வெற்றியை நெருங்கினோம். நான் சிக்சர் அடிக்க முடியும் என்று உண்மையிலேயே நம்பினேன். அதனால் தான் ஒரு சிங்கிள் எடுக்க ஓடவில்லை,” என்று கூறினார்.

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close