இரானி கோப்பையை வென்றது விதர்பா!

  Newstm Desk   | Last Modified : 17 Feb, 2019 05:42 am
vidarbha-wins-irani-cup

ரஞ்சி கோப்பை சாம்பியனான விதர்பா, இந்தியாவின் சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணியுடன் மோதிய போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கும், இந்தியாவை சேர்ந்த மற்ற சிறந்த வீரர்களை கொண்ட ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையே, இரானி கோப்பை பட்டத்திற்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சில் 330 ரன்கள் அடித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய விதர்பா, 425 ரன்கள் அடித்து 95 ரன்கள் முன்னிலை பெற்றது. இரண்டாவது இன்னிங்சை துவக்கிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, 3 விக்கெட் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸை துவக்கியது விதர்பா. துவக்க வீரர் ஃபஸல் டக் அவுட்டானாலும், சஞ்சய் ரகுநாத் 42 ரன்களும், அதர்வா தைடே 72 ரன்களும் விளாசினர். தொடர்ந்து களமிறங்கிய கணேஷ் சதீஷ் 87 ரன்கள் விளாசினார்.

11 எடுத்தால் வெற்றி என்ற நிலையில், சதீஷ் விக்கெட்டை பறிகொடுத்தார். 5 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்களை விதர்பா எடுத்திருந்தபோது ஓவர்கள் முடிந்து போட்டி டிரா ஆனது. முதல் இன்னிங்சில் 95 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால், விதர்பா போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையை கைப்பற்றியது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close