9 ரன்னில் ஆல்அவுட்... 9பேரும் டக்அவுட்: 6 பந்தில் வெற்றி

  Newstm Desk   | Last Modified : 22 Feb, 2019 05:14 pm
all-out-for-9-mizoram-t20-cricket-team-incurs-9-ducks-against-madhya-pradesh-run-chase-completed-in-6-balls

சர்வதேச போட்டிகளை போலவே உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் நிறைந்ததாக இருக்கும் அந்த வகையில் புதுவையில் நடந்த போட்டி ஒன்றில் ஒரே அணியை சேர்ந்த 9 பேர் டக்அவுட் ஆன சம்பவம் நடந்துள்ளது.

புதுச்சேரியில் உள்ள பல்மரா கிரிக்கெட் மைதானத்தில் மிசோரம் மற்றும் மத்திய பிரதேசம் பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி நடைபெற்றது. 

இதில் மிசோரம் அணி 13.5 ஓவர்களுக்கு வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மட்டுமே 6 ரன்கள் எத்திருந்தார். மற்றவர்கள் அனைவரும் டக் அவுட் ஆகினர். மேலும் 3 ரன்கள் எக்ஸ்டிராவாக கிடைத்தது. மத்திய பிரதேசம் அணியை சேர்ந்த 4 ஓவர்கள் 4 விக்கெட்கள் எடுத்து 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

அடுத்ததாக விளையாட வந்த மத்திய பிரதேச அணி வெறும் 6 பந்துகளில் இலக்கை எட்டி வெற்றிப்பெற்றது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close