ஆசியப் போட்டிகளில் மீண்டும் கிரிக்கெட்!

  Newstm Desk   | Last Modified : 04 Mar, 2019 02:42 pm
cricket-again-in-asian-games

சீனாவில் வரும் 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறவுள்ளது என இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) தெரிவித்துள்ளது.

கடந்த 2010, 2014 - ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட்டும் இடம்பெற்றிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற இப்போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறவில்லை.

இந்த நிலையில், சீனாவின் ஹாங்ஷு நகரில் வரும் 2022- இல் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை மீண்டும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜீவ் மேத்தா கூறும்போது, "2022 ஆசியப் போட்டிகளில், டி20 கிரிக்கெட் வகை போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் ஆண்கள், பெண்கள் இரு பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு விரைவில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும்" என அவர் கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close