பவுலிங்கை விட இந்தியில் பேசுவது தான் பிரஷர்: விஜய் சங்கர்

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 02:45 pm
pressure-is-more-in-speaking-in-hindi-vijay-shankar-tells-yuzvendra-chahal

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்த பின் சாஹல் டிவியில் பேசிய விஜய் சங்கர், 'கடைசி ஓவரில் பவுலிங் செய்வதை விட இந்தியில் பேசுவது தான் பிரஷராக இருக்கிறது' என்று தெரிவித்தார். 

ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் இந்திய பந்துவீச்சாளர்களை பேட்டி எடுப்பார் இந்திய வீரர் சாஹல். இந்த வீடியோக்களை சாஹல் டிவி என்று பிசிசிஐ வெளியிடும்.

அந்த வகையில் நேற்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு பிறகு கேப்டன் கோலி மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் பேசினர். அப்போது சாஹலின் பந்துவீச்சை விராட் கோலி பாராட்டினார். 

இதனையடுத்து, விஜய் சங்கரிடம், 'உங்களுக்கு கடைசி ஓவர் வீசுவது பிரஷரா. இந்தி பேசுவது பிரஷரா.. ' என்று சாஹல் கேட்டார். அதனைக்கேட்டதும் சிரித்த விஜய் சங்கர், " கடைசி ஓவரில் பந்துவீசுவதைவிட ஹிந்தியில் பேசுவதுதான் கொஞ்சம் பிரஷர்' என்று பதில் அளித்தார். 

மேலும், "கடைசி ஓவர் வீசுவதற்கு நான் தயாராகவே இருந்தேன்.  நான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். அதனையே செயல்படுத்தினேன்” என்றார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close