அந்த பாகிஸ்தான் பெளலர் தான் என் ஆல் - டைம் ஃபேவரெட் : தவான் தடாலடி!

  Newstm Desk   | Last Modified : 07 Mar, 2019 06:11 pm
delhi-capitals-shikhar-dhawan-names-this-pakistan-bowler-as-his-favourite-of-all-time

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோகிப் அக்தர் தான் தமக்கு எப்போது பிடித்தமான வீரர் என்று இந்திய அணியின் முன்னணி பேஸ்ட்மேன்களில் ஒருவரான ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள், வரும் 23 -ஆம் தேதி தொடங்கவுள்ளன. இதில் இம்முறை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஷிகர் தவான், "டெல்லி கேபிடல்ஸ்" அணிக்காக  விளையாடுகிறார். 

இந்த நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், டெல்லியில் தனக்கு பிடித்தமான பொழுதுபோக்கு இடம் எது? என்பதில் தொடங்கி, தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர் யார்? என்பது வரை பல்வேறு கேள்விகளுக்கு தவான்  சுடச்சுட பதிலளித்துள்ளார்.

அதில் தமக்கு பிடித்தமான கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்விக்கு, "பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோகிப் அக்தரை ரொம்ப பிடிக்கும் அவர் தான், தமக்கு எப்போதும் பிடித்தமான வீரர்" என தவான் பளிச்சென பதிலளித்துள்ளார்.

இந்தியா -பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே அரசியல்ரீதியாக தொடர்ந்து நிலவி வரும் பகைமையுர்ணவு, இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளிலும்  வெளிப்படும். இந்த நிலையில், ஷிகர் தவான் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close