பிசிசிஐ ஊதிய ஒப்பந்த பட்டியல்: தமிழக வீரரின் பெயர் நீக்கம்!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 10:34 am
bcci-central-contracts-virat-kohli-rohit-sharma-jasprit-bumrah-in-a-category

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய ஒப்பந்த பட்டியலை தரம் வாரியாக பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் தமிழக வீரர் முரளி விஜய் நீக்கப்பட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் நிர்வாக அமைப்பான பிசிசிஐ, வீரர்களுக்கு 4 பிரிவுகளில் ஊதியம் வழங்கி வருகிறது. ஏ பிளஸ், ஏ, பி, சி என்று நான்கு வகையாக வீரர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டுதோறும் சம்பள ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

அதன்படி பிசிசிஐ வெிளியிட்டுள்ள இந்த பட்டியலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்திய ரிஷப் பண்ட் ஏ பிரிவில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஷிக்கர் தவான் ஆகியோர் ஏ பிளஸ் வகையில் இருந்து ஏ பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

கடந்தாண்டு இறுதியில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிய தமிழக வீரர் முரளி விஜய் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை. 

கிரேடு ஏ பிளஸ் வகை வீரர்களுக்கு வருடத்திற்கு ரூ.7 கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. கிரேடு ஏ வீரர்களுக்கு ரூ. 5 கோடியும், பி கிரேடு வீரர்களுக்கு ரூ. 3 கோடியும் மற்றும் சி பிரிவு வீரர்களுக்கு ரூ.1 கோடியும் வருடத்திற்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. 

ஆண்கள் கிரிக்கெட் அணியினர்: 

கிரேடு ஏ பிளஸ் (ரூ. 7 கோடி): விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா.

கிரேடு ஏ (ரூ. 5 கோடி): அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், புஜாரா, ரஹானே, எம்.எஸ். தோனி, தவான், ஷமி, இஷாந்த் ஷர்மா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட். 

கிரேடு பி (ரூ. 3 கோடி): கே.எல்.ராகுல், உமேஷ் யாதவ், சாஹல், ஹர்திக் பாண்டியா

கிரேடு சி (ரூ. 1 கோடி): கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், அம்பத்தி ராயுடு, மணிஷ் பாண்டே, ஹனுமா விஹாரி, கலீல் அஹ்மத், சஹா. 

பெண்கள் கிரிக்கெட் அணி:

கிரேடு ஏ (ரூ. 50 லட்சம்): மிதாலி ராஜ், ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா, பூனம் யாதவ்

கிரேடு பி (ரூ. 30 லட்சம்): ஏக்தா பிஷ்ட், ஜுலன் கோஸ்வாமி, ஷிக்கா பாண்டே, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ்

கிரேடு சி (ரூ. 10 லட்சம்): ராதா யாதவ், டி ஹேமலாதா, அனுஜா படேல், வேதா கிருஷ்ணமூர்த்தி, மன்சி ஜோஷி, பூனம் ரவட்,  மனோ மெஷ்ரம், அருந்தததி ரெட்டி, ராஜேஷ்வரி கயக்வத், தானியா பாட்டியா, பூஜா வஸ்த்ரகர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close