பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி: ஆஸி. அணியில் ஸ்மித், வார்னர் இல்லை

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 11:46 am
warner-smith-not-considered-as-australia-name-unchanged-side-for-pakistan-odis

துபாயில் நடைபெறவிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் அகியோர் இடம்பெறவில்லை.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடைக்காலம் அனுபவித்து வரும் ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்டீவன் ஸ்மித் மற்றும டேவிட் வார்னர் ஆகியோரின் தடைக்காலம் வரும் 28ம் தேதியோடு முடிவடைகிறது. 

தற்போது இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இதனையடுத்து பாகிஸ்தானுடன் ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது. 

இந்த தொடரில் 4வது போட்டி மார்ச் 29ம் தேதி நடைபெறுகிறது. எனவே 4வது மற்றும் 5வது போட்டியில் ஸ்மித்தும், டேவிட்டும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியை இன்று 'கிரிக்கெட் ஆஸ்திரேலியா' அறிவித்துள்ளது. அந்த அணியில் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரின் பெயர்கள் இடம்பெறவில்லை. தற்போது இந்திய அணியுடன் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியே பாகிஸ்தானுடன் விளையாடும் அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் மார்ச் மாதம் 23ம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. எனவே அந்த தொடரில்  ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close