தோனி ஏன் ஓய்வு பெறவேண்டும்?- சவுரவ் கங்குலி கேள்வி

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 04:05 pm
why-should-ms-dhoni-retire-sourav-ganguly

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இந்தியா வெற்றிப் பெற்று தோனி தொடர்ந்து சிறப்பாக விளையாடினார் என்றால் அவர் ஏன் ஓய்வு பெற வேண்டும் தொடர்ந்து விளையாடலாம் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் மூத்த வீரராக இருக்கும் தோனி நிலையற்ற ஃபார்ம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இருந்தும் அவர் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் நிச்சயம் விளையாடுவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. உலகக்கோப்பை தொடருக்கு பிறகு தோனி கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசும் போது, "தோனி ஏன் ஓய்வை அறிவிக்க வேண்டும். உலகக்கோப்பை தொடரில் இந்தியா வெற்றிப்பெற்று அவர் சிறப்பாக விளையானடினார் என்றால் அவர் தொடர்ந்து விளையாடுவதில் என்ன தவறு. திறமை இருக்கும் போது வயது பெரிய விஷயமாக இருக்காது" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close