3வது ஒருநாள்: பின்ச், கவாஜா அதிரடியால் 313 விளாசிய ஆஸி!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 05:30 pm
3rd-odi-314-target-for-india

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில், கவாஜா, பின்ச்சின் அதிரடி ஆட்டத்தால், ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் எடுத்து, வலுவான இலக்கை இந்தியாவுக்கு நிர்ணயித்துள்ளது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வென்ற இந்திய அணி, 3வது போட்டியில் கோப்பையை கைப்பற்றும் நோக்கத்தோடு விளையாடி வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்களை இந்தியாவுக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் துவக்க பார்ட்னர்ஷிப்பான உஸ்மான் கவாஜா மற்றும் ஆரோன் பின்ச், அதிரடியான துவக்கம் தந்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 193 ரன்கள் விளாசினர். கவாஜா (104) சதமடிக்க, கேப்டன் பின்ச் 93 ரன்கள் அடித்தார். தொடர்ந்து வந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல், 47 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய அணி, 350 ரன்களுக்கும் மேல் அடிக்க வாய்ப்பிருந்தது. ஆனால், இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்கள் எடுத்து, இறுதியில் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினார். 314 ரன்களை இலக்காக கொண்டு இந்தியா களமிறங்குகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close