3வது ODI: ஆஸ்திரேலியா 32 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி!

  Newstm Desk   | Last Modified : 08 Mar, 2019 11:15 pm
australia-beat-india-by-32-runs

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலியின் அதிரடி சதம் வீணாக, 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. 

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி 313 ரன்கள் சேர்த்தது. துவக்க வீரர் பின்ச் 93 ரன்கள் அடிக்க, கவாஜா 104 ரன்கள் விளாசினார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . 

கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, துவக்கத்திலேயே தடுமாறியது. தவான், ரோஹித் ஷர்மா, ராயுடு ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக, விராட் கோலி மட்டும் பொறுமையாக விளையாடினார்
 தொடர்ந்து வந்த தோனி மற்றும் கேதார் ஜாதவ் 26 ரன்கள் அடித்து அவுட்டாக, கோலி சரியான ஜோடி இல்லாமல் தனியாக போராடினார். விடா முயற்சி செய்த கேப்டன் விராட் கோலி 126 ரன்கள் அடித்த நிலையில்  ஜம்பாவின் பந்தில் அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 48.1 ஓவர்களில் 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றியை தொடர்ந்து, இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close