அடுத்த போட்டியில் அணியில் மாற்றம் இருக்கும்: விராட் கோலி

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 08:36 am
a-little-hiccup-in-the-middle-but-we-will-regroup-and-come-back-stronger-virat-kohli

இந்திய அணியினர் தொடர்ந்து விக்கெட்டை இழந்ததாகவும், முடிந்த வரை பார்டனர்ஷிப் அமைத்து விளையாட முயற்சித்தும் தோல்வியடைந்ததாகவும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

ராஞ்சியில் நேற்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியிடம் 32 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது இந்திய அணி. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி 41வது சதத்தை அடித்தார்.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் பேசிய கோலி, "ஆஸ்திரேலிய அணி பந்துவீசிய போது கடைசி 10 ஓவர்களில் அவர்களை கட்டுப்படுத்தினோம். அந்த அணியினர் விளையாடியதை பார்த்த போது 350க்கும் மேலான இலக்கை சேஸ் செய்ய வேண்டி இருக்கும் எனவே நினைத்தோம். அவர்கள் முதல் 40 ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்தனர். மேக்ஸ்வேல் விக்கெட் பறிப்போன பின் இந்தியாவின் பவுளிங் சிறப்பாக இருந்தது.  ஆஸ்திரேலியாவில் தொடக்க வீரர்கள் சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினர். உஸ்மான் ஒரு சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்ற போது, மேக்ஸ்வேல் அதிரடியை வெளிப்படுத்தினார்.  

இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர். அவர்களுக்கு இன்னும் சில வாய்ப்புகள் வேண்டும். நாங்கள் சரிவடைய விரும்பவில்லை. முடிந்த வரை பார்டனர்ஷிப் அமைத்து விளையாடினோம்.

என்னால் முடிந்த வரை கடினமாக விளையாடி போராடினேன். எனக்கு எப்போதும் ஒரு நம்பிக்கை இருக்கும். நான் அதிக ரன்கள் எடுக்கவே நினைப்பேன். ஸம்பா சிறப்பாக பந்துவீசினார். நான் எனது விக்கெட்டை இழந்த போது மிகவும் அதிருப்தி அடைந்ததேன். அடுத்த போட்டியில் அணியில் சில மாற்றங்கள் இருக்கும்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close