45 ரன்னில் ஆல்அவுட்டான வெஸ்ட் இண்டீஸ்!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 09:50 am
west-indies-skittled-for-45-as-england-win-t20-series

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 45 ரன்களில் சுருண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும் இங்கிலாந்து அணி  137 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 11.5 ஓவர்களில் 45 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் இங்கிலாந்து அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் தொடரை வென்ற நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டி20 போட்டி வரும் 11ம் தேதி நடைபெறவுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close