மைதானத்துக்கே தோனியின் பெயரை வைக்க வேண்டும்: கவாஸ்கர்

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 02:04 pm
entire-jsca-stadium-in-ranchi-should-be-renamed-to-ms-dhoni-stadium-sunil-gavaskar

ராஞ்சி கிரிக்கெட் மைதானத்திற்கு தோனியின் பெயரை வைக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது தெரிவித்துள்ளார். 

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்த தோனி, தற்போது அந்த மாநிலத்தின் அடையாளமாக திகழ்கிறார். இந்திய அணியின் கேப்டனாக அவர் இருந்த போது தொடர்ந்து கோப்பைகளை வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் தரத்தை உயர்த்தினார். 

தற்போது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி தனது அனுபவத்தை வைத்து அணியின் கடினமாக நேரங்களில் களமிறங்கி அசத்தி வருகிறார். இந்நிலையில் தோனியின் சாதனைகளை போற்றும் வகையில் தற்போது ஜார்கண்ட் கிரிக்கெட் மைதானத்தின் தெற்கு பெவிலியனுக்கு தோனியின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று ராஞ்சி மைதானத்தில் போட்டி நடந்த போது இதுகுறித்து அதிகாரப்பூர்வமபாக அறிவிக்கப்பட்டடது. 

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது வர்ணனையாளர்களாக இருந்து சஞ்சய் மஞ்ரேகர் மற்றும் கவாஸ்கரின் உரையாடல் குறித்து தோனி ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றன.

அதில், "சின்ன டவுனில் இருந்து வந்து சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த இந்திய அணியை அவர் வழிநடத்தி இருக்கிறார். சச்சின், டிராவிட் என பலரும் அவர் தலைமையில் விளையாடி இருக்கின்றனர். அவர் பெயரில் பெவிலியன். மைதானத்தின் பெயர் என்ன? என்று கவாஸ்கரிடம் சஞ்சய் மஞ்ரேகர் கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதில் அளித்த கவாஸ்கர், "நல்ல கேள்வி. தற்போது அந்த பெவிலியனுக்கு தோனியின் பெயரை வைத்துள்ளனர். அந்த பகுதியில் இருக்கும் மற்றொரு சாதனையாளரின் பெயரை மைதானத்திற்கு வைக்கலாம். ராஞ்சியில் பெரிய சாதனையாளர் தோனி தான். இந்த மைதானமே மகேந்திர சிங் தோனி மைதானம் என்று தான் அழைக்கப்படவேண்டும். அது தான் ராஞ்சியின் மகனுக்கு செய்யும் மரியாதை" என்றார் .

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close