ஆஸிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி: தோனி அவுட்... பண்ட் இன்

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 04:14 pm
ms-dhoni-shikhar-dhawan-to-make-way-for-rishabh-pant-kl-rahul

மொஹாலியில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் மகேந்திர சிங் தோனி மற்றும் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ரிஷப் பண்ட் மற்றும் ராகுல் இணைக்கப்படுகின்றனர். 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  வருகிறது. இதில் முதலில் டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றது. இதனையடுத்து தற்போது ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற இந்திய அணி நேற்று ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் தோல்வியடைந்தது. 

இந்நிலையில் நாளை மொஹாலியில் 4வது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் அணியில் மாற்றம் இருக்கும் என்று விராட் கோலி தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து பேட்டிங் கோச் சஞ்சய் பஙகார் பேசும் போது, "4வது மற்றும் 5வது  போட்டியில் தோனிக்கு  ஓய்வுக் கொடுக்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் விளையாடுவார். உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக நடக்கும் கடைசி ஒருநாள் தொடர் என்பதால் அனுபவத்துக்காக மட்டுமே பன்ட் சேர்க்கப்படுகிறார். இதேபோல் மேலும் சில மாற்றங்கள் இருக்கும். ஷமிக்கு ஏற்பட்டுள்ள காயம் சரியாகவில்லை என்றால் புவனேஷ்வர் குமார் களமிறக்கப்படுவார்" என்றார்.

இதே போல நாளைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் தவானுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் சேர்க்கப்படுவார் என தெரிகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close