வைரலாகும் தோனி - ஜடேஜா காம்போவின் சூப்பர் ரன் அவுட்!

  Newstm Desk   | Last Modified : 09 Mar, 2019 04:48 pm
dhoni-jadeja-s-maxwell-run-out-goes-viral

இந்திய, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை, அசத்தலாக பீல்டிங் செய்த ஜடேஜா மற்றும் தோனி கூட்டணி சேர்ந்த ரன் அவுட் செய்து வெளியேற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. இந்த போட்டியில் அசத்தலான துவக்கம் பெற்ற ஆஸ்திரேலிய அணி, 350 ரன்களுக்கும் மேல் குவிக்கும் வாய்ப்பு இருந்தது. சிறப்பாக விளையாடி வந்த அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை, வீழ்த்த இந்திய அணி போராடி வந்த நிலையில், ஜடேஜா மற்றும் தோனி சேர்ந்து அசத்தலாக ரன் அவுட் செய்து வெளியேற்றினர்.

மார்ஷ் அடித்த ஷாட்டை பாய்ந்து தடுத்த ஜடேஜா, மின்னல் வேகத்தில் அதை தோனியை நோக்கி வீசினார். எதிர்முனையில் இருந்த மேக்ஸ்வெல் கோட்டை தாண்ட வேகமாக ஓடி வருவதற்குள், ஜடேஜா வீசிய பந்தை, கீப்பர் தோனி ஒற்றை கையால் ஸ்டம்ப்பை நோக்கி கூலாக தள்ளினார். ரீபிளேவில் மேக்ஸ்வெல் அவுட்டானதாக தெரிய வந்தது. சிறப்பாக பீல்டிங் செய்த ஜடேஜாவையும், கணநேரத்தில் அட்டகாசமாக செயல்பட்ட தோனியையும் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்த ரன் அவுட்டிங் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close