4வது ஒருநாள் போட்டியில் தோனி இல்லை: இந்தியா பேட்டிங்

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 01:11 pm
india-won-the-toss-and-chose-to-bat-first

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி இன்று மொஹாலியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் தோனிக்க பதிலாக பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடைபெற்ற 2வது ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்ற 3வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிப்பெற்றது. 

இந்நிலையில் இன்று 4வது போட்டி நடைபெறுகிறது. இந்திய அணி கேப்டன் முன்னரே கூறியது போன்று இன்றைய போட்டியில் தோனிக்கு பதிலாக பண்ட், ராயுடுக்கு பதிலாக ராகுல், சமிக்கு பதிலாக புவனேஷ்வர் குமார், ஜடேஜா பதிலாக சஹால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 

அணி விவரம்: 

இந்தியா அணி : ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோலி, ராகுல், கேதர் ஜாதவ், பண்ட், விஜய் சஙகர், குல்தீப் யாதவ், சஹால், புவனேஷ்வர் குமார், பும்ரா

ஆஸ்திரேலியா அணி : பின்ச், கவாஜா, ஹாண்ட்ஸ்கோம், மாக்ஸ்வல், டர்னர், அலேக்ஸ் கேரி, ரிச்சர்ட்சன், கம்மின்ஸ், பெக்ரண்டப், ஷாம்பா

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close