4வது ODI: சதமடித்த தவான்; ரோஹித்துடன் சாதனை ஓப்பனிங்!

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 03:55 pm
4th-odi-rohit-dhawan-record-opening-partnership

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்திய துவக்க வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் தவான் சேர்ந்து, முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் அடித்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சாதனையை படைத்துள்ளனர்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலை வகிக்கிறது. 4வது போட்டியில் இன்று இந்தியா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. துவக்க வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவான் அட்டகாசமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தனர். 95 ரன்கள் அடித்தபோது, ரோஹித் அவுட்டானார். ரோஹித் தவானின் இந்த கூட்டணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா எடுக்கும் அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ஆகும். 

தொடர்ந்து விளையாடி வரும் தவான், 12 பவுண்டரி, ஒரு சிக்சருடன், 97 பந்துகளில் சதமடித்தார். மறுமுனையில் கே.எல் ராகுல் களமிறங்க 33 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 206 ரன்கள் அடித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close