ஐசிசியின் அனுமதிக்குப் பின்பே இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்தனர்

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 05:47 pm
indian-players-sported-camouflage-caps-in-3rd-odi-against-australia-after-permission-from-icc

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய வீரர்கள்  ராணுவ தொப்பி அணிவதற்கு முன் ஐசிசியிடம் உரிய அனுமதி பெற்றனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கடந்த மாதம் 14ம் தேதி புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் ராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியினர் ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். 

இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். 

இந்நிலையில் இதுகுறித்து ஐசிசி வட்டாரங்கள் பேசும் போது, "இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து விளையாடுவதற்கு முன்பு ஐசிசி தலைவர் டேவ் ரிச்சர்ட்சன்னிடம் உரிய அனுமதி பெற்றுவிட்டனர்" என தெரிவித்துள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close