4வது ODI: தவான், ரோஹித் அதிரடியில் இந்தியா 358

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 05:13 pm
india-set-359-target-for-australia

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவானின் அதிரடி ஆட்டத்தால் 358 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி இரண்டு ஒன்று என முன்னிலை வைக்கிறது. இந்நிலையில்  நான்காவது போட்டி இன்று மொஹாலியில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய துவக்க வீரர் ரோஹித் ஷர்மா, தவான் அதிரடியாக விளையாடினர் முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 191 ரன்கள் குவித்தனர். 

அடுத்து வந்தவர்கள் கேஎல் ராகுல் 26 ரன்களுக்கும், பண்ட் 36, கோலி 7, ஜாதவ் 10, விஜய் சங்கர் 26, புவனேஸ்வர் குமார் 1 ரன்னுக்கும் விக்கெட்டை இழந்தனர். அதன் பின் வந்த சாஹலும் ஒரு ரன்னுக்கு விக்கெட்டை இழந்தார். கடைசியாக விளையாட வந்த பும்ரா 6 ரன்கள் அடித்தார். 

50 ஓவர்கள் முடிவில் 358 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close