டர்னரின் ஆட்டமே ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு காரணம்

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 03:47 pm
turner-s-batting-changed-the-game-kohli

4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 358 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தும் கூட, ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதற்கு, அந்த அணியின் டர்னரின் அதிரடி ஆட்டமே காரணம் என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள், 5  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. 2-1 என தொடரில் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்த நிலையில், நேற்று 4வது போட்டி நடைபெற்றது. இதில், முதலில் பேட் செய்த இந்திய அணி, ரோஹித் ஷர்மா (143) மற்றும் தவானின் (95) அதிரடி ஆட்டத்தால் 358 ரன்கள் என்ற பெரும் இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்தது. 

தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலியா, ஆரம்பத்தில் திணறினாலும், கவாஜா(91), மற்றும் ஹேண்ட்ஸ்கோம்ப்பின் (117) பார்ட்னர்ஷிப்பால் முன்னேற்றம் கண்டது. தொடர்ந்து களமிறங்கிய அஷ்ட்டன் டர்னர், வெறும் 43 பந்துகளில் 84 ரன்கள் அடித்து, ஆஸ்திரேலியாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த வெற்றியை தொடர்ந்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, டர்னரின் அதிரடி ஆட்டமே, தங்களது தோல்விக்கு காரணம் என்று கூறினார்.

மேலும், "ஆஸ்திரேலியா மிக சிறப்பாக விளையாடியதால் வெற்றி பெற்றார்கள். இறுதிப் போட்டி மிக சிறப்பானதாக இருக்கும். கடந்த இரண்டு போட்டிகளிலும் நாங்கள் பாடம் கற்றுக் கொண்டுள்ளோம். அடுத்த போட்டியில் மிக கடினமாக உழைத்து, மேலும் சிறப்பாக விளையாட வேண்டும்" என்று கோலி கூறினார். 

முன்னதாக டர்னர் அவுட்டானதாக இந்திய அணி டிஆர்எஸ் மூலம் ரிவ்யூ செய்தது. ஸ்னிக்கோமீட்டர் மூலம் பார்த்தபோது, பந்து பேட்டில் பட்ட பின் விக்கெட் கீப்பர் கேட்ச் பிடித்தது போல தெரிந்தாலும், அவுட் வழங்கப்படவில்லை. இதுகுறித்து பேசிய விராட் கோலி,  டி.ஆர்.எஸ்-ஸின்  முடிவுகளில் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close