கொலையை விட கொடூரமானது மேட்ச் பிக்சிங்: தோனி தடாலடி

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 07:24 pm
match-fixing-is-a-bigger-crime-to-me-than-murder-dhoni

அதிரடி பேட்ஸ்மேனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி, சி.எஸ்.கே அணியின் மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் குறித்து பேசியபோது, என்னை பொருத்தவரை கொலையை விட மேட்ச்பிக்சிங் மிகப் பெரிய குற்றம், என்று கூறினார்.

2013 ஐபிஎல் மேட்ச் பிக்சிங் சர்ச்சையை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் 2016 மாறும் 2017ம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மீண்டும் ஐபிஎல்லுக்கு திரும்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அபாரமாக விளையாடி கோப்பையை கைப்பற்றியது. இதுகுறித்து எடுக்கப்பட்டு வரும் ஒரு ஆவணத்தில் பேசிய சிஎஸ்கே கேப்டன் மற்றும் அதிரடி வீரர் தோனி, மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டுகள் தன்னை மிகவும் பாதித்ததாக கூறினார்.

மேலும், "தன்னைப் பொருத்தவரை, கொலையைவிட மிகப் பெரிய குற்றம் மேட்ச் பிக்சிங் தான்" என்றும் தோனி கூறினார். மேலும்,  "அணி வீரர்கள் சம்பந்தப்படுத்தப்பட்டனர். என் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அது எங்கள் அனைவரையும் மனதளவில் மிகவும் பாதித்தது. தண்டனை மிகமோசமானதாக ரசிகர்கள் கருதினர். ஆனால் திரும்ப வந்து கோப்பையை வென்றது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைந்தது. என்னைப் பொருத்தவரை, நம்மை கொல்லாத எந்தவொரு விஷயமும் நம்மை பலமானதாக ஆக்கும்" என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close